Web Ad 2

அப்போ விஜய்.. இப்போ தனுஷ்.. மாற்றிப் பேசி ரசிகர்களிடம் சிக்கிய கயாடு லோஹர்..!

மாற்றி மாற்றி பேசி ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் கயாடு லோஹர்.

actress kayadu lohar latest video viral
actress kayadu lohar latest video viral

தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்து பிரபலமானவர் கயாடு லோஹர். இவர் தமிழில் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூலையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து அதர்வாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக இருக்கும் இவர் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு உள்ளார். அப்போது அவரிடம் உங்களுடைய செலிபிரிட்டி கிரஷ் யார் என்று கேட்க அதற்கு அவர் தளபதி விஜய் என்று கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் விஜய் நடித்ததில் தெறி படம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் உரையாடலில் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என கேட்ட கேள்விக்கு தனுஷ் என்று கூறியுள்ளார்.எனக்கு தனுஷ் பிடிக்கும் வேற யாருக்கும் இடம் இல்லை என்று மாற்றி மாற்றி பேசி சிக்கியுள்ளார்.

இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.