Web Ads

பராசக்தி படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பராசக்தி படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Parasakthi movie shooting update viral
Parasakthi movie shooting update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற திரைப்படத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது பராசக்தி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்க உள்ளதாகவும்,அதற்காக பட குழு அடுத்த வாரம் இலங்கைக்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ரவி மோகன் ,அதர்வா ஸ்ரீ லீலா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Parasakthi movie shooting update viral
Parasakthi movie shooting update viral