அம்மாவின் புகைப்படத்துடன் தர்ஷா குப்தா வெளியிட்ட பதிவு,குவியும் வாழ்த்து..!
அம்மாவின் புகைப்படத்துடன் தர்ஷா குப்தா பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் தர்ஷா குப்தா.
![Actress Dharsha Gupta Latest Update](https://kalakkalcinema.com/wp-content/uploads/2024/12/Actress-Dharsha-Gupta-Latest-Update-2.jpg)
சில வாரங்களுக்கு முன் யாரும் எதிர்பாராத விதமாக தர்ஷா குப்தா எலிமினேஷன் செய்யப்பட்டார். அவரது ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது அம்மாவின் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், அன்பு, அக்கறை, அரவணைப்பு ,பாசம் ,நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையான வாழ்க்கை வாழும் கடவுள் அவள் தான் அம்மா.. அம்மா உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
தனது அம்மாவின் பிறந்த நாளுக்கு அழகாக வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram