Web Ads

செருப்பு பிஞ்சிடும்டா நாயே: நடிகை அலிஷா கடும் ஆவேசம்; காரணம் என்ன?

நடிகை அலிஷா ஆத்திரம் அடைந்து, “செருப்பு” என்றெல்லாம் பேசியதற்கு என்ன காரணம்? இது பற்றிய விவரம் காண்போம்..

சினிமா-அரசியல் இரண்டிலும் பரபரப்பாக பயணித்து வருபவர் சீமான். இவர், தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்த கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

சீமான் தொடர்பாக, ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்கிறது. இணைய வாசிகளும் சீமானைப் பிடிக்காதவர்களும், சீமானுக்கு எதிராக பதிவுகளை பகிர்வதும் வாடிக்கையாக நிகழ்கிறது.

இந்நிலையில், இணையவாசி ஒருவர், துணை நடிகை ஆலிசா அப்துல்லா, சீமானுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ‘நடிகை விஜயலட்சுமி மாதிரி புகார்கள் வராமல் இருந்தால் சரி’ என கூறியுள்ளார்.

இந்த பதிவுக்கு துணை நடிகை அலிஷா அப்துல்லா, ‘செருப்பு பிஞ்சிடும்டா நாயே’ என கடும் ஆவேசமாய் பதிவிட்டுள்ளார். இப்பதிவு இணையத்தில் வேகமாக பரவியும் வருகிறது.

அலிசா அப்துல்லா அடிப்படையில் கார் மற்றும் பைக் ரேஸ் சாம்பியன். சில தினங்களுக்கு முன்னர் கூட மணிக்கு 278 கிலோ மீட்டார் வேகத்தில் கார் ஓட்டிய வீடியோவை பகிர்ந்திருந்தார். இவர் ‘இரும்புக் குதிரை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

actress alisha abdullah badly comment with seeman photo