ஆர்த்திக்கு, குஷ்பூ பிறந்தநாள் வாழ்த்து; ரவிமோகனும் தெரிவிப்பாரா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஆர்த்திக்கு ரவிமோகன் பிறந்தநாள் வாழ்த்தாவது தெரிவிப்பாரா’ என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்..
ஜெயம் ரவி என்ற ரவி மோகனும், ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்து 15 ஆண்டுகள் வாழ்ந்தனர். தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் ரவி மோகன் என்பதெல்லாம் தெரிந்ததே.
மகன்கள் இருவரும் ஆர்த்தியுடன் இருக்கிறார்கள். அவர்களை தன்னுடன் வைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இருப்பதாகவும் தெரிவித்தார் ரவி. பிரிவுக்கு பிறகு, ஆர்த்தி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இன்ஸ்டாவில், தனது பெயரை ‘ஆர்த்தி ரவி’ என்றுதான் வைத்திருக்கிறார். விவாகரத்து குறித்து விளக்கம் அளித்த அறிக்கைகளை வைத்திருக்கிறார்.
இதற்கிடையே ரவி மோகனின் இன்ஸ்டா கணக்கை ஆர்த்தி தான் நிர்வகித்து வந்தார் என்றும், பிரிவுக்கு பிறகும் அதை திருப்பிக் கொடுக்காமல் இருந்தார் என்றும் கூறப்பட்டது. கணக்கை திரும்ப பெற்ற பிறகு, அதில் இருந்த ஆர்த்தியின் புகைப்படங்களை நீக்கினார் ரவி மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை குஷ்பு தனது நெருங்கிய தோழியான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்திக்கு, தனது பிறந்த நாள் வாழ்த்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ரசிர்களும் ஆர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, ரவிமோகனும் ஆர்த்திக்கு ஏதாவது வாழ்த்து தெரிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். வாய்ப்பில்லை? என்றாலும் ரசிகர்களின் மனங்கள் காத்திருக்கிருக்கின்றன.