சூரியின் கதையில் ‘மாமன்’ படம் ரிலீஸ்: குடும்பங்கள் கொண்டாடுமா?

நடிகர் சூரியின் ‘மாமன்’ திரைப்படம் ஃபேமிலி என்டர்டெய்னர் மூவியாக அமையுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..

‘கருடன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சூரி நடிப்பில் உருவான ‘மாமன்’ பட ஷுட்டிங் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, இப்படம் மே 6-ந் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதன் படப்பிடிப்பை முழுக்க திருச்சியை சுற்றி படமாக்கப்பட்டு உள்ளது. படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜன்.

குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம். இப்படத்தின் கதையை சூரி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில், சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘விலங்கு’ வெப்சீரிஸ் வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ள படம் இதுவாகும். ‘கருடன்’ படத்தின் தயாரிப்பாளர் குமார் இப்படத்தையும் தயாரித்துள்ளார்.

‘விடுதலை’ படத்தில் மிகவும் பேர் பெற்ற சூரி, இப்படத்திற்கு கதையும் எழுதி நடித்திருப்பதால், மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளார். இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அமையுமா? பார்ப்போம்.!