சினிமாக்காரர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா?: ரஜினி பதில், வைரல்..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.

அப்போது, அவரிடம் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க இருக்கும் படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அவர் கூறும்போது, ‘அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் இரண்டுக்கும் சேர்த்து ஒரு படம் பண்ண போகிறேன். இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்குச் சரியான கதை, கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். கிடைத்தால் நடிப்போம்’ என்றார்.

பின்னர், கோவை விமான நிலையம் சென்ற அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு 6 நாட்கள் நடக்க இருக்கிறது. அடுத்த வருடம் ஜூன் மாதம் படம் வெளியாகும்’ என்றார்.

அவரிடம் ‘திரைக் கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “நோ கமெண்டஸ்” என்று பதிலளித்து விட்டுச் சென்றார். இந்நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய், தற்போது கடைசிப்படமாக ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை முடித்து விட்டு தவெக கட்சித் தலைவராக முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor vijay politics in rajinikanth answer viral
actor vijay politics in rajinikanth answer viral