‘கங்குவன்’ கேரக்டருக்காக, தினமும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்தார் சூர்யா: வெளியான புதிய தகவல்
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவான கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான பான் இந்திய படம் என்பதால், இப்படத்தின் ப்ரோமோஷனை படக்குழு பார்த்து பார்த்து செய்து வருகின்றது.
இந்தியா முழுவதும் கங்குவா படத்தின் ப்ரோமோஷனை செய்து வருகின்றனர். இதற்காக இரண்டு வாரங்கள் தன் கால்ஷீட்டை ஒதுக்கியிருக்கின்றார் சூர்யா. இரண்டு வருடங்கள் கழித்து சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் கங்குவா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
தன் கரியரில் கங்குவா மிக முக்கியமான படம் என்பதால், இப்படத்திற்காக சில தியாகங்களை சூர்யா செய்திருக்கின்றார். இப்படம் முடிவடையும் வரை, சூர்யா தினம் பலமணி நேரம் உடற்பயிற்சி செய்தார்.
வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் நேரத்தை தவிர, அதிக நேரம் சூர்யா உடற்பயிற்சி செய்தார். ஏனெனில் படத்தில் வரும் கங்குவன் கேரக்டர் அப்படி. நிச்சயம் மிரள வைப்பான். மேலும், கங்குவா படத்திற்காக சூர்யா தன் சம்பளத்தில் இருந்தும் சில கோடிகளை குறைத்து உள்ளதாகவும் தற்போது கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. ஆனால், அப்படங்கள் திரையில் வெளியாகாமல் OTT யில் மட்டுமே தான் வெளியாகின. கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
எனவே, சூர்யாவிற்கு தற்போது மிகப்பெரிய வெற்றிப்படம் தேவை.அதுவும் கங்குவா போன்ற ஒரு பிரம்மாண்டமான படைப்பு வெற்றி பெற்றால், சூர்யாவின் மார்க்கெட் பல மடங்கு உயரும். எனவே தான் இப்படத்திற்காக சூர்யா மிக கடுமையாக உழைத்திருக்கிறார்.
இப்படம், இந்தியளவில் ஆயிரம் திரைக்கு மேல் வெளியாகின்றது.அதுமட்டுமல்லாமல் சோலோவாக இப்படம் வெளியாகின்றது. மேலும் கோலிவுட் வட்டாரத்தில் இப்படத்திற்கு பாசிட்டிவான டாக் இருந்து வருகின்றது.
படம் பார்த்த சிலர் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். தமிழில் மட்டுமல்லாமல் இந்திய ளவில் கங்குவா படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கின்றது. இவ்வாறு பல சிறப்பம்சங்கள் கங்குவா படத்தில் இருப்பதால், கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் வாரி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆம், சூர்யா திரைப்பயணத்தில், இது ஒரு மைல் கல் படம் என்றால் அது மிகையல்ல.!