விவாகரத்து பற்றிய கதையில் நடிக்கிறார் ஜெயம் ரவி: இதோ விவரம்
சமீபமாக விவாகரத்து அதிகம் ஏற்படுகிறது. இதற்கான தீர்வு என்ன என்பது குறித்த கதையில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது பற்றி காண்போம்..
காதலிக்க நேரமில்லை, ஜீனி, டாடா என அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாகி ஜெயம் ரவி விட்டார். இதனைத் தொடர்ந்து, ஷங்கரின் உதவியாளர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது விவாகரத்து பற்றி சொல்லும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
சமீபகாலமாக விவாகரத்து பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதற்கான காரணம் என்ன? மற்றும் இதற்கான தீர்வு என்ன? என்பதை பற்றி சொல்லும் படமாக இது இருக்கும் என தகவல் வந்துள்ளது.
சமீபத்தில் தான் ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கு விவாகரத்து ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் விவாகரத்து தொடர்பான கதையை கொண்ட படத்தில் நடிப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் ‘பிரதர்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கும் இப்படத்தில், நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார்.
அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு காதலைப் பேசும் இந்த படம் வெளியாக இருப்பதாக திரைத்துறை தெரிவிக்கிறது.
அன்பு, பாசம், காதல், கல்யாணம், விவாகரத்து என எத்தனையோ கதைக்கரு..! அத்தனையிலும் நடித்து ஜெயமாகட்டும் ரவி சார்..