அதிகம் எமோஜி பயன்படுத்துபவர் என் அப்பா: கமல் பற்றி ஸ்ருதி புதிய தகவல்
கமல்ஹாசனுக்கு தற்போது 70 வயதானாலும் இளமையாக வாழும் கலையிலும் ஆச்சரியமாய் நிற்பவர். இந்நிலையில், அவர் பற்றி தற்போது ஸ்ருதிஹாசன் சொன்ன வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புதிய தகவல்கள் என்ன என்பதை அறிவோம்..
‘டெக்ஸ்ட் செய்யும் போது அதிகம் எமோஜி பயன்படுத்துபவர் என் அப்பா. இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாது. மீன் எமோஜி, ஏலியன் எமோஜி எல்லாம் பயன்படுத்துவார் அவர்.
நான் லவ் யூ பானு மெசேஜ் அனுப்புவேன். அவர் டிபிக்கல் தமிழ் அப்பா. அவ்வளவு சீக்கிரத்தில் லவ்யூலாம் சொல்ல மாட்டார். அதனால் Blushing எமோஜி அனுப்புவார்.
ட்ரெய்லர் பார்த்தேன், நல்லா இருக்கு என நான் மெசேஜ் செய்தால் கூலிங் கிளாஸ் எமோஜி வரும். அவர் இப்படித் தான் நிறைய எமோஜி பயன்படுத்துவார்’ என ஸ்ருதி கூறியுள்ளார்.
இது குறித்து ரசிகர்கள், ‘கமல்ஹாசன் எமோஜி பயன்படுத்துவதை நம்ப முடியவில்லை. எங்களுக்கு தெரிந்து 70 வயது நபர் ஒருவர் எமோஜியை அதிகம் பயன்படுத்துகிறார் என்றால் அது ஆண்டவர் மட்டும் தான். அவர் எப்பொழுதுமே வித்தியாசமானவர். புது விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பவர்.
அதனால், அவர் எமோஜியை பயன்படுத்துவது ஆச்சரியமான விஷயம் இல்லை என்றும் கூட சொல்லலாம் என்கின்றனர்’ ரசிகர்கள்.
ஊர், உலகமெல்லாம் AI பற்றி பேசுகிறது. இந்நிலையில் கமல் ஹாசனோ ஏ.ஐ. பற்றி கற்றுக் கொள்ள அமெரிக்காவுக்கு சென்றார்.
இந்த வயதில், புது தொழில்நுட்பம் பற்றி படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு இருப்பதை பார்த்து வியக்காதவர்களே இல்லை எனலாம். எப்பொழுதும் தன்னை அப்டேட்டாக வைத்துக் கொள்ளத் தவறாதவர் கமல்ஹாசன்.
கெரியரை பொறுத்தவரை மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். அந்த படம் ஜூன் 5ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

