Pushpa 2

சிவகார்த்திகேயன் நடித்த படங்களின் 100 கோடி வசூலை தாண்டிய திரைப்படங்களில் லிஸ்ட்..! உங்க ஃபேவரைட் படம் எது?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் 100 கோடி வசூலை தாண்டிய திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

Actor Sivakarthikeyan Movie Latest Update
Actor Sivakarthikeyan Movie Latest Update

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் தத்ரூபமான நடிப்பு ரசிகர்களின் மிகவும் கவர்ந்துள்ளது என்று சொல்லலாம்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் உலக அளவில் 100 கோடி வசூலை தாண்டிய திரைப்படம் குறித்து பார்க்கலாம். நெல்சன் திலிக்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் 102 கோடி வசூல் செய்திருந்ததாக சொல்லப்படுகிறது இது மட்டும் இல்லாமல் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் 105 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

முக்கியமாக தற்போது வெளியான அமரன் திரைப்படம் மூன்றே நாளில் நூறு கோடியை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று படங்களில் உங்களுடைய ஃபேவரைட் படம் எது என்பதை எங்களுடன் கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Actor Sivakarthikeyan Movie Latest Update
Actor Sivakarthikeyan Movie Latest Update