Pushpa 2

தனுஷின் குபேரா மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்கள் ரிலீஸ் எப்போது?

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என வலம் வரும் தனுஷ் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் ஒரு பீல் குட் படமாக உருவாகிறது. தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகின்றார். இப்படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகி வருகின்றது.

வாத்தி என்ற படத்தின் மூலம் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார் தனுஷ். இப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இதனைத்தொடர்ந்து தனுஷிற்கு தெலுங்கில் மார்க்கெட் உருவானது.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு நேரடி தெலுங்கு திரைப்படமான குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா, நாகர்ஜுனா ஆகியோரும் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குபேரா திரைப்படத்தை டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாம். குபேரா திரைப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட தனுஷ் மற்றும் படக்குழு முடிவெடுத்து இருப்பதாக தகவல் வந்துள்ளது.

டிசம்பர் மாதம் புஷ்பா 2 போன்ற மிகப்பெரிய படங்கள் வெளியானாலும், தில்லாக குபேரா படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளார் தனுஷ். ஏனென்றால், டிசம்பர் இறுதியில் வெளியானால் பொங்கல் வரை வேறெந்த புது படமும் வெளியாகாது. எனவே கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் எந்த புது படங்களும் வெளியாகாது என்பதால் குபேரா படத்தை அந்த தேதியில் வெளியிடலாம் என படக்குழு முடிவெடுத்து இருப்பதாக தெரிகின்றது.

மறுபக்கம் தனுஷ் இயக்கி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படமும் டிசம்பர் மாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பை தனுஷ் தான் ரசிகர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.