இயக்குனர் பாலாவின் வாழ்த்திற்கு நன்றி தெரிவித்து சசிகுமார் போட்ட பதிவு.!!

Web Ads

இயக்குனர் பாலா சசிகுமாருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் சசிகுமார் பதில் பதிவு வெளியிட்டு உள்ளார்.

actor sasikumar latest post update
actor sasikumar latest post update

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் சமீபத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வந்த வரவேற்பு பெற்று இருந்தது.

இந்த நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்காக சசிகுமார் அவர்களுக்கு சிறந்த நடிகன் விருது வழங்கியதால் இயக்குனர் பாலா அவரைப் பாராட்டி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

Web Ad 2

அதில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திற்கு நீ சிறந்த நடிகனாக விருது வாங்கி இருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் மன வெளிப்பாடுதான் கடிதம் கடந்த 25 வருடங்களாக உன்னை பற்றி நான் கணித்தது நீ போராடி பெறுபவன்,பேராற்றல் கொண்டவன் கொந்தளிக்கிற கடலையும் சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை உன் உள் அன்பை நேரில் மட்டுமல்ல திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன் உனக்குள் உரிமைக் கொண்டிருக்கிற அந்த சம்பவக்காரன் சசியை என் இனிய இயக்குனனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் கடிதத்தை வெளியிட்டு அதில் தேசிய விருது அங்கீகாரம் தந்த பாலா அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி. உங்கள் ஆசையை சீக்கிரமே நிவர்த்தி செய்கிறேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.