உலகளாவிய வெளியீடாகும் மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ படம் அப்டேட்ஸ்..

Web Ads

பிரம்மாண்டமாய் உருவாகி ரிலீஸாகும் ‘எம்புரான்’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்..

மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படம் வருகிற 27-ம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகிறது.

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார், முரளி கோபி எழுதியுள்ளார். 2019-ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான லூசிபரின் 2-ம் பாகமாக உருவாகி உள்ளது.

குரேஷி-அப்ராம், ஸ்டீபன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கும் இப்படத்தில் பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், சுராஜ் வெஞ்சாரமூடு உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ மூலம் உலகப் புகழ் பெற்ற ஜெரோம் ஃபிளின் இப்படத்தில் நடித்திருப்பது படத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தை அளித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, யுஏஇ, சென்னை, மும்பை, குஜராத், லடாக், கேரளா, ஹைதராபாத், ஷிம்லா, லே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ‘எம்புரான்’ படமாக்கப்பட்டு உள்ளது.

இப்படம், ஒரு மலையாளப் படத்திற்கு கிடைக்கவுள்ள உலகளாவிய வெளியீடாக இருக்கும். இப்படத்தின் 3-ம் பாகத்தில் மோகன்லால், பிருத்விராஜ், முரளி கோபி, தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆண்டனி பெரும்பாவூர் உள்ளிட்டோர் நடிப்பதை உறுதி செய்துள்ளனர்.

முன்னதாக ‘எம்புரான்’ படத்தின் தமிழ் டிரைலரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor mohanlal in empuraan movie update
actor mohanlal in empuraan movie update