நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பும் எல்லோருக்கும் அமைய வேண்டும்.. நடிகர் மம்மூட்டி பேச்சு..!

நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைய வேண்டும் என்று மம்மூட்டி கூறியுள்ளார்.

actor mammootty latest speech viral
தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா,ஆனந்தம், மக்களாட்சி மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் கமிட் ஆகி வரும் மம்முட்டி தற்போது பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
அதாவது உலக அழிவு வரை நாம் வாழ்வோம் என்பது பொய் என்றாலும் அப்படி நம்புவதால் தான் மனிதர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் கடவுள் நம்பிக்கையில் கூட நல்லது செய்தால் தான் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என இருக்கிறது அதை நம்பியாவது நல்லது செய்வோம் கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பும் எல்லோருக்கும் அமைய வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor mammootty latest speech viral