பிரபல தமிழ் நடிகர் மரணமடைந்ததாக வெளியான தகவலால் திரையுலகினர் அதிர்ச்சியாகி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் மாயி சுந்தர்.

இந்த படத்தை தொடர்ந்து சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச், விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம் உட்பட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் மாயி சுந்தர் உடல் நலக் குறைபாடு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனால் இவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.