‘பிளடி பெக்கர்’ கவின், நயன்தாராவுடன் இணையும் ‘ஹாய்’ திரைப்படம்..

‘முயற்சியும் பயிற்சியும் இருந்தால் முன்னேற்றம் நிகழும்’ என்பது போல படிப்படியாய் முன்னேறி தற்போது நயன்தாராவுடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் கவின். அது குறித்து பார்க்கலாம்..

அதாவது, ‘பிக்பாஸ்’ மூலம் கிடைத்த புகழை சரிவர பயன்படுத்திக் கொண்ட பிரபலங்களில் கவினும் ஒருவர். அந்நிகழ்ச்சிக்கு பின்னர், கவினுக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன.

அதில், சரியான கதைகளை தேர்வு செய்து நடித்ததால் அவரது படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. டாடா, லிஃப்ட், ஸ்டார் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த கவின், அடுத்ததாக பிளெடி பெக்கர் என்கிற படத்தில் நடித்துள்ளார். நெல்சன் தயாரித்துள்ள இப்படத்தை சிவபாலன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவின் பிச்சைக்காரனாக நடித்துள்ளார்.

இப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை முடித்த கையோடு நடிகர் கவின் கைவசம் கிஸ், ஆண்ட்ரியா உடன் ஒரு படம், நயன்தாரா ஜோடியாக ஒரு படம் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்நிலையில், கவின் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள படத்தின் டைட்டில் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு எடவன் என்பவர் தான் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘ஹாய்’ என இரண்டே எழுத்தில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

விரைவில், இப்படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்’ என கோலிவுட் பறவைகள் சிறகடிக்கின்றன.

Actor kavin and actress nayanthara in hai movie
Actor kavin and actress nayanthara in hai movie