
அஜித் கார் ரேஸ் வெற்றிக்கு, முக்கிய காரணம் யார்? வைரலாகும் நிகழ்வுகள்..
தனது கார் ரேஸ் வெற்றிக்கு காரணமானவர் பற்றி அஜித் தெரிவித்துள்ள நிகழ்வை இங்கே காண்போம்..
சினிமாவுக்காக சில ஆண்டுகள் கார் ரேஸில் பங்கேற்காமல் இருந்த அஜித், தற்போது மீண்டும் அதில் களமிறங்கி இருக்கிறார்.
இதற்காக, துபாயில் கடந்த சில மாதங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்ட அஜித், பின்னர் தனது அணி கார் ரேஸில், மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது.
அஜித்தின் மனைவி ஷாலினி தன் மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்காவோடு வந்து கார் ரேஸை கண்டுகளித்தார். அஜித் கார் ஓட்டும் போது, அவருக்காக கத்தி ஆரவாரம் செய்த ஷாலினி, அவர் வெற்றி பெற்றதும் கட்டிப்பிடித்து அவருக்கு லிப் கிஸ் கொடுத்து, அன்பை வெளிப்படுத்தி இருந்தார்.
நடிகர் ஆரவ்வும் அஜித்தின் ரசிகராக மாறி, ரேஸில் தன் சப்போர்ட்டை தெரிவித்தார். விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வில்லன் ஆன அர்ஜுன் தாஸும் அஜித்தின் கார் ரேஸை கண்டுகளித்து, அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவர் தற்போது அஜித்துடன் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருக்கிறார்.
அஜித்தின் நண்பர் மாதவனும் துபாயில் அஜித் பங்கேற்ற கார் ரேஸை நேரில் கண்டுகளித்தார்.
அப்போது, ‘ தான் ஒரு நடிகனாக வரவில்லை, அஜித்தின் ரசிகனாக வந்திருக்கிறேன்’ என்று சொல்லி அஜித்துடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
அஜித்தின் வெறித்தனமான ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும், மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தனும் துபாய் சென்று அஜித் கார் ரேஸ் ஓட்டியதை நேரில் கண்டுகளித்தனர்.
‘வெற்றிக்கு பின், தன் மனைவி ஷாலினி கொடுத்த உத்வேகம் தான், இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்’ என அஜித் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, மேடையில் இருந்தபடியே தன் மனைவி ஷாலினிக்கு பிளையிங் கிஸ் கொடுத்து தன் அன்பை பரிமாறிக் கொண்டது அமர்க்களமாய் தெறிக்க விட்டுள்ளது. இது செம வைரலாகி வருகிறது.
