
வெற்றிமாறன் இயக்கத்தில், மீண்டும் தனுஷ்: கதைக்களம் எதைப் பற்றியது?
திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்பட பணிகள் நடந்து வருகிறது. சூர்யா நாயகனாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார்.
இப்படத்திற்கான அனிமேஷன் பணிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்கிற நாவலை தழுவி இப்படம் உருவாகவுள்ளது.
இச்சூழலில், சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘பேட்டைக்காரன்’ படத்தை முடித்த பின்னர், ‘வாடிவாசல்’ ஷூட்டிங்கில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
இதனால், தற்போது மற்றுமொரு ‘மாஸ்’ படத்தை இயக்க வெற்றிமாறன் தயாராகி வருகிறார். அதாவது, ‘கேஜிஎப்’ பை மையமாக வைத்து திரைப்படத்தை எடுக்கவுள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் வொர்க்கில் அவர் கவனம் செலுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் ‘விடுதலை’ படத்தை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய 4 படங்களும் ஹிட் அடித்ததால், இருவரும் 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைய உள்ளனர் என கோலிவுட் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.
