என்னை ப்ரொமோட் செய்யாதீங்க.. ரசிகர்களுக்கு அஜித் வைத்த கோரிக்கை.!!

ரசிகர்களுக்கு அஜித் கோரிக்கை ஒன்று வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது அதனை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது மீண்டும் இவர்களது கூட்டணியில் உருவாகும் திரைப்படம் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு பக்கம் படங்களில் பிசியாக இருந்தாலும் கார் ரேஸில் அஜித் குமார் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் கார் ரேஸில் இருக்கும்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அஜித் குமார் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.அதாவது இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் பற்றி ப்ரோமோட் பண்ணுங்க என்னை ப்ரோமோட் செய்யாதீங்க என்று கூறியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் எவ்வளவு கஷ்டம் என மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் எனவும் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram