Abirami Venkatachalam's Video goes viral : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television

Abirami Venkatachalam’s Video goes viral :

பிக் பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன் இவர் ரசிகர்களுக்காக வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசன் நேற்று துவங்கியுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.

காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் – ரெடியா சூர்யா ஃபேன்ஸ்?

இதில் சேரன், ஜாங்கிரி மதுமிதா, சாண்டி மாஸ்டர், பாத்திமா பாபு, மோகன் வைத்யா, செரின், சாக்ஷி அகர்வால்,

மலேசியாவை சேர்ந்த மாடல்கள் இருவர், பருத்திவீரன் சரவணன், அபிராமி வெங்கடாச்சலம், ரேஷ்மா, வனிதா விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

இதில் நடிகை அபிராமி வெங்கடாச்சலம் அஜித்தின் நேர்கொண்ட பார்வையில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன் இவர் ரசிகர்களுக்காக வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.