சர்கார் சர்ச்சை
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

A.R.Murugadas next movie update – ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது நடிகர் ரஜினியை வைத்து தர்பார் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில் முருகதாஸ் அடுத்து யாரை வைத்து இயக்கப்போகிறார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நீச்சல் குளத்தில் VJ மகேஸ்வரி நடத்திய போட்டோஷூட் – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்

இந்நிலையில், பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரடெக்‌ஷன் நிறுவனம் ‘ஏ.ஆர்.முருகதாஸிடமிருந்து விரைவில் ஒரு அறிவிப்பு வெளியாகவுள்ளது. யார் என்பதை யூகியுங்கள்’ என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

murugadas

இதைத்தொடர்ந்து துப்பாக்கி 2-வைத்தான் முருகதாஸ் எடுக்கப்போகிறார் என விஜய் ரசிகர்களும், அஜித் நடிக்க இருப்பதாக அஜித்தின் ரசிகர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனவே, முருகதாஸ் விரைவில் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here