Web Ad 2

பிக் பாஸ் தொடக்க விழாவிற்கு கணவருக்காக வராமல் இருந்ததற்கு காரணம் இதுதான்.. பிரியா ராமன் ஓபன் டாக்..!

Web Ads

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வராதது குறித்து பிரியா ராமன் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் தொடங்கி உள்ளது.

18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒருவராக ரஞ்சித் கலந்து கொண்டார். தொடக்க விழாவின் போது போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் போது அவரது உறவினர்கள் மற்றும் அறிமுகம் செய்வார்கள்.

அதேபோல் ரஞ்சித் போட்டியாளராக வரும்போது அவரது மனைவி பிரியா ராமன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அங்கு வரவில்லை. இதனால் பல கேள்விகள் எழுப்பப்பட்டது இருவருக்கும் பிரச்சனையா? பிரிந்து விட்டார்களா?என்ற பல கோணத்தில் பேசி வந்தனர்.

priya raman latest speech update
priya raman latest speech update

ஆனால் இதற்கெல்லாம் விளக்கம் கொடுக்கும் விதமாக பிரியா ராமன் பதிலளித்துள்ளார். அதில் பிக் பாஸில் கலந்து கொள்வது கடைசி நேரத்தில் தான் முடிவு செய்யப்பட்டது ஒரு வாரத்தில் தான் நாங்கள் முடிவெடுத்தோம். இது மட்டுமில்லாமல் எங்களுக்கு நெருக்கமான ஒரு இளம் ஜோடிக்கு எங்களால் ஒரு நல்லது நடக்க இருந்தது அதனால் அந்த இடத்தில் நாங்கள் கலந்து கொள்ள முடிவு செய்தோம் ஆனால் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடக்க நாளும் அதே நாளில் இருந்ததால் யாராவது ஒருவராவது அந்த இளம் ஜோடிக்கு நடக்கும் நல்ல விஷயத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து தான் என்னால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் இதுவரை பரவிய அனைத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தகவல் இருக்கிறது.

priya raman latest speech update
priya raman latest speech update