கல்கி படம் எப்படி இருக்கு? பிரம்மாண்டமா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ!
கல்கி படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க..
பாகுபலி படத்தின் மூலம் உலகம் அறியும் நடிகராக மாறிய பிரபாஸ் நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் தான் கல்கி.
நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், அமிதாப், தீபிகா படுகோன் என பலர் இணைந்து நடித்து வெளியாகி உள்ள இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கதைக்களம் :
மகாபாரத போர் நடந்து முடிய துரோணாச்சார்யா மகன் பாண்டவர் குடும்பத்தில் கருவில் உள்ள குழந்தையை அழிக்க கோபமடையும் கிருஷ்ணன் உனக்கு மரணமே இல்லை, உடல் முழுவதும் இரத்தம் வழிந்து நான் கலியுகத்தில் ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் போது, என்னை நீ காப்பாற்ற வேண்டும், அப்போது தான் உனக்கு விடுதலை கிடைக்கும் என சாபம் விடுகிறார் .
மரணமே இல்லாமல் பல ஆயிரம் ஆண்டுகள் உயிரோடு இருக்கும் யாஷ்கின் உலகின் கடைசி நகரமான காசியில் மக்களை தனது அடிமையாக்கி ஒரு ஊரை உருவாக்கி பல பெண்களின் கருவில் இருந்து ஒரு சீரோம் முயற்சி செய்து வருகிறார். எடுக்க அந்த ஊரில் ஒரு பவுண்டி ஹண்டராக பிரபாஸ் வர கமல் இருக்கும் காம்ப்ளஸ்குள் நுழைய போராடுகிறார்.
அப்போது அங்கிருக்கும் தீபிகா படுகோன் வயிற்றில் ஒரு குழந்தை உருவாக அவரது வயிற்றில் இருக்கும் குழந்தை கிருஷ்ணர் தான் என்று துரோணாச்சாரியாரின் மகனுக்கு எப்படி தெரிய வருகிறது. அந்த குழந்தையை காப்பாற்றி எப்படி சாபத்தில் இருந்து வெளியே வருகிறார் என்பது தான் கதைக்களம்.
படத்தைப் பற்றிய அலசல் :
படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து படத்திற்கு அழகு சேர்த்துள்ளனர்.
காட்சிகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக பிரமிக்க வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு மேலும் வலுவூட்டுகிறது.
இயக்குனரின் கதை, திரைக்கதை பிரம்மிக்க வைக்கிறது.
மொத்தத்தில் கல்கி நிச்சயம் மனதை கவரும்.