ஹனுமான் 2 டைட்டில் போஸ்டர் வெளியீடு!

Web Ads

‘ஹனு-மேன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாக ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இளம் நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் டைட்டில் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் Vi. ஆனந்த் இயக்குகிறார். புராணம், கற்பனை மற்றும் பிரம்மாண்டமான சாகசங்கள் நிறைந்த ஃபேண்டஸி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது.

வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டரில், மேகங்களுக்கு மேலே தெய்வீகப் பின்னணியுடன் பிரம்மாண்டமாக எழும் ஒரு மனிதனின் தோற்றம் இடம்பெற்றுள்ளது. வானுலக வால் மற்றும் மாயாஜாலக் காட்சிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஹனு-மேன் யுனிவர்ஸின் அடுத்தகட்டப் பயணம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Web Ad 2

இப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிக்கின்றனர். ஏற்கெனவே ‘ஹனு-மேன்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்நிறுவனம், தற்போது சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘எஸ்.ஒய்.ஜி.’ (SYG) மற்றும் கிச்சா சுதீப் நடிக்கும் ‘பி.ஆர்.பி.’ (BRB) ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது.

‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ படத்தின் மூலம் புதிய கற்பனை உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப் படக்குழு தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.