அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

Web Ads

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பரப் பணிகளுக்கு ரசிகர்கள் அளித்து வரும் பேராதரவுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. அனைத்து தளங்களிலும் கிடைத்து வரும் வரவேற்பு தங்களை நெகிழச் செய்துள்ளதாகவும், ரசிகர்களின் அன்பும் நம்பிக்கையும் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, ‘அன்பில் அவன்’ திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இந்நிலையில், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் விநியோகஸ்தர்களிடம் ஏற்பட்டுள்ள அதிகப்படியான எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு, படத்தின் வெளியீட்டை ஒரு வாரம் தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி, ‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Web Ad 2

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை, பெரிய அளவிலான வெளியீட்டுடன் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், தொடர்ந்து தங்களது அன்பையும் ஆதரவையும் வழங்குமாறும் படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.