‘சூர்யா 47’ படப்பிடிப்பு நிறைவு: ஜீத்து மாதவனுடன் இணையும் சூர்யாவின் ஆக்ஷன்-காமெடி அதிரடி!

Web Ads

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 47-வது திரைப்படத்தின் (‘சூர்யா 47’) படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘ஆவேஷம்’ திரைப்படத்தை இயக்கிய ஜீத்து மாதவன், இப்படத்தை இயக்கியுள்ளார்.

போலீஸ் அதிகாரியாக சூர்யா: முற்றிலும் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த வணிகத் திரைப்படமாக உருவாகியுள்ள இதில், நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ‘பிரேமலு’ புகழ் நஸ்லென், நஸ்ரியா, ஜான் விஜய், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தங்களது ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து வெளியாகும் சூர்யா படங்கள்: நடிகர் சூர்யா ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து சூர்யாவின் திரைப்படங்கள் நிறைவடைந்து வருவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.