கட்டில் முதல் ப்ரிட்ஜ் வரை… பாவா லட்சுமணனுக்கு அனைத்தையும் வழங்கிய லெஜன்ட் சரவணன்

மீண்டும் உதவிக்கரம் நீட்டிய லெஜன்ட் சரவணன்… நடிகர் பாவா லட்சுமணனுக்கு முழு வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கி வாக்கை நிறைவேற்றினார்!
வீடு இல்லாமல் திண்ணையில் தங்கியிருந்த நடிகர் பாவா லட்சுமணனின் நிலையை அறிந்த லெஜன்ட் சரவணன், முன்பே ₹2 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். அந்த உதவி நடிகர் கூல் சுரேஷ், லெஜன்ட் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் மற்றும் பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோரின் மூலம் சென்றடைந்தது.
தற்போது, எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்கி வரும் பாவா லட்சுமணனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கட்டில், மெத்தை, பீரோ, வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, குக்கர், பாத்திரங்கள், ப்ரிட்ஜ், சோபா செட் உள்ளிட்ட அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் லெஜன்ட் சரவணன் வழங்கினார்.
இந்தப் பொருட்கள் அனைத்தையும் நடிகர் கூல் சுரேஷ், ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் மற்றும் பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோர் வாகனத்தில் ஏற்றி பாவா லட்சுமணனிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர். லெஜன்ட் சரவணனின் இந்த மனிதநேய செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.
