ரவி மோகனின் கராத்தே பாபு வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

Web Ads

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில், கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘கராத்தே பாபு’ ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விறுவிறுப்பான அரசியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், ஏற்கனவே வெளியான முன்னோட்டம் மற்றும் பாடல்களின் மூலம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவி மோகனின் 34-வது படமாக உருவாகும் ‘கராத்தே பாபு’, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரவி மோகனுடன் இணையும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அகிலன் மற்றும் பிரதர் படங்களில் இக்கூட்டணி இணைந்திருந்தது.

இந்த படத்தில் தவ்தி ஜிவால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் கே. எஸ். ரவிகுமார், சக்தி வாசு, நாசர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் கணேஷ் கே பாபு கூறியதாவது, அரசியல்வாதிகளின் பொது வாழ்க்கையை விட அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் அதிகம் பேசப்படாதது என்றும், அந்த மறுபக்கம் குறித்து பேசும் உணர்வுப்பூர்வமான அரசியல் திரில்லராக ‘கராத்தே பாபு’ உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி. எஸ். பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவு எழில் அரசு கே, படத்தொகுப்பு கதிரேஷ் அழகேசன், சண்டைப் பயிற்சி திலிப் சுப்பராயன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழு பணியாற்றியுள்ளது.

வலுவான நடிகர் பட்டாளம், பிரம்மாண்ட தயாரிப்பு மற்றும் அரசியல் சார்ந்த திரைக்கதை காரணமாக ‘கராத்தே பாபு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.