“எக்ஸாம்” வெப் சீரிஸ் மே 15ல் ஓடிடியில் ரிலீஸ்

Web Ads

பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா ‘எக்ஸாம்’ – மே 15 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங்!

இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான Prime Video, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) தொடரின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சஸ்பென்ஸ் டிராமா சீரிஸ் வரும் மே 15 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான Pushkar–Gayathri இணைந்து உருவாக்கியுள்ள இந்த தொடரை, தேசிய விருது பெற்ற இயக்குநர் A. Sarkunam எழுதி இயக்கியுள்ளார். ஏழு எபிசோட்கள் கொண்ட இந்த சீரிஸில் Dushara Vijayan மற்றும் Aditi Balan முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், Abbas முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

போட்டித் தேர்வுகளின் அழுத்தம் மற்றும் அதன் பின்னணியில் உருவாகும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட இந்த சஸ்பென்ஸ் கதை, பதட்டமும் உணர்ச்சியும் கலந்த ஒரு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘எக்ஸாம்’ சீரிஸ், இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது.

தமிழில் வெளியாகும் இந்த தொடர், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடனும் கிடைக்கும்.

பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறுகையில், “இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான கதையாக ‘எக்ஸாம்’ அமைகிறது. போட்டித் தேர்வுகளின் உணர்ச்சி அழுத்தத்தை திகில் நிறைந்த கதை வடிவில் மிகச் சிறப்பாக பதிவு செய்கிறது. இது கோடிக்கணக்கான பார்வையாளர்களைத் தொடும் என நம்புகிறோம். ‘Suzhal – The Vortex’ மற்றும் ‘Vadhandhi – The Fable of Velonie’ போன்ற வெற்றி தொடர்களுக்குப் பிறகு, புஷ்கர்–காயத்ரியுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி,” என்றார்.

இதுகுறித்து புஷ்கர்–காயத்ரி கூறுகையில், “மனிதர்களின் ஆசை, அநீதி மற்றும் நெறிமுறை சிக்கல்களை இந்த தொடரின் மூலம் ஆராய்கிறோம். சிக்கலான சூழ்நிலையில் தளராமல் போராடும் ஒரு இளம் பெண்ணின் கதையே ‘எக்ஸாம்’. உலகளவில் எங்கள் கதைகளை கொண்டு செல்ல பிரைம் வீடியோ சிறந்த தளமாக உள்ளது,” என்றனர்.

உணர்ச்சி, பதட்டம் மற்றும் சமூகச் சிந்தனையை இணைக்கும் இந்த ‘எக்ஸாம்’ சீரிஸை, வரும் மே 15 முதல் பிரைம் வீடியோவில் பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.