Web Ad 2

மிரட்டலான ஆக்‌ஷனுடன் வெளியான லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’ பட டிரெய்லர்!

Web Ads

சென்னை: ‘தி லெஜெண்ட்’ படத்தைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் அதிரடியான ஆக்‌ஷன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், முழுநீள ஆக்‌ஷன் கதையம்சம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற படத்தின் இசை வெளியீடு மற்றும் பிரீ-ரிலீஸ் விழாவில் இந்த டிரெய்லர் வெளியிடப்பட்டது.

 

டிரெய்லர் சிறப்பம்சங்கள்: இந்த டிரெய்லரில் லெஜண்ட் சரவணனின் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தந்தை – மகள் பாசப் பிணைப்பை மையமாக வைத்து உணர்ச்சிகரமான காட்சிகளும் படத்தில் இருக்கும் என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது. “மனுசங்க மூலமா தான் எல்லா நல்லதும் நடக்கும்” என்ற வசனம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

படக்குழுவினர்: ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் பாடல்கள் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆக்‌ஷன் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தணிக்கைக் குழுவில் ‘யு/ஏ’ (U/A) சான்றிதழ் பெற்றுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 03-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.