ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணங்களை இரு தரப்பும் சொல்லவில்லை.. இயக்குனர் அமீர் பேச்சு..!

Web Ads

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர்.

director amir talk about jananayagan movie
director amir talk about jananayagan movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக தற்போது வரை இந்த திரைப்படம் வெளியாகாமல் இருந்து வருகிறது

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்த நிலையில் இந்த படம் நிறுத்தி வைத்ததற்கான காரணத்தை பல்வேறு பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் அவர்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர்அமீர் இது குறித்து பேசி உள்ளார்.

அதாவது இதற்கு முன் தேர்தல் நேரத்தில் எந்த படமும் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை என்று கூறிய அவர் முதல்முறையாக விஜயின் ஜனநாயக நிறுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல் இந்த படம் நிறுத்தப்பட்டிருப்பதற்கான காரணங்களை இருதரப்பும் சொல்லாமல் அமைதி பார்த்து வருவதாகவும் இயக்குனர் அமீர் பேசி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து பாஜக உடனான கூட்டணி குறித்து பேசியாவர் விஜயின் உள்ளத்தில் இருப்பதை நம்மால் விவரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் எடுத்திருக்கும் ஸ்டாண்ட் சரியானதுதானா என்றால் சரியானது தான் நாம் வரவேற்று தான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். மக்களுக்கு நல்லது செய்யணும்னு வரவங்கள முதல் பார்வையிலேயே இப்படி சந்தேகப்பட முடியும் போற போக்குல பார்த்து தெரிஞ்சுக்கலாம் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director amir talk about jananayagan movie
director amir talk about jananayagan movie