நட்பை வலுப்படுத்தும் கேமியோ ரோல்: ‘ஜெயிலர்-2’ படம் பற்றி சிவராஜ்குமார் அப்டேட்ஸ்..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ திரைப்டத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர்-2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஃபீல் குட் மூவியாக உருவாகும் ‘தலைவர்-173’ படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கன்னட திரையுலக மெகா ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘45 தி மூவி’. இப்படத்தில் ராஜ் பி செட்டி, உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி வெளியாக உள்ளது

இந்நிலையில், படத்தின் ரிலீஸையொட்டி சிவராஜ்குமார் தற்போது புரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது சிவராஜ்குமார், ’ஜெயிலர் 2’ படத்தின் அப்டேட் கொடுத்தார்.

ஜெயிலர் 2 படத்திற்காக ஒரு நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டேன், நாளை மீண்டும் படப்பிடிப்பு உள்ளது. ஜனவரி மாதத்தில் 3 நாட்கள் படப்பிடிப்பு உள்ளது. இது கிட்டத்தட்ட ஜெயிலர் படத்தின் தொடர்ச்சிபோல இருக்கும். முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது இதில் எனது கேமியோ கதாபாத்திரம் சற்று நீளமாக இருக்கும்.

இரு திரையுலகங்களுக்கும் இடையே நட்பை வலுப்படுத்தும் விதமாக இந்த கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். மேலும், ஜெயிலர்-2 படத்தில் மலையாள திரையுலக மெகா ஸடார் மோகன்லாலும் இணையவிருக்கிறார்.

i have done day of shoot for jailer2 by shivarajkumar
i have done day of shoot for jailer2 by shivarajkumar