‘பராசக்தி’ படத்தின் கதை என்ன தெரியுமா?: வைரலாகும் தகவல்..

Web Ads

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் இப்படம் களமிறங்குகிறது. பராசக்தி படத்தின் ஓடிடி உரிமை பெரிய தொகைக்கு விற்பனையாகி உள்ளது.

இந்த படத்தில் ரவிமோகன் வில்லனாக வருகிறார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம், இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தின் கதை இதுதான் என்று கூறும் ஒரு கதை வலைதளத்தில் உலா வருகிறது.

அதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு மெட்ராஸில் நடைபெற்ற ஒரு உரிமை மறுப்பு போராட்டத்தில், கிளர்ச்சியாளர்களை ஒழிக்க ஒரு அதிகாரி வருகிறார். ஆனால், அவரது சகோதரர் தான் போராட்டத்துக்கு மூலகாரணமாக இருக்கிறார். இறுதியில் பாசமா? நீதியா? என்ற சூழலில் நாயகன் எடுக்கும் முடிவு தான் ‘பராசக்தி’ படத்தின் கதை என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஆயினும் இந்த தகவல் வைரலாகி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

the story of the film parasakti information spreading the internet
the story of the film parasakti information spreading the internet