‘ரஜினி-173’ பட இயக்குநர் நித்திலனா? ராம்குமாரா?

‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர் யார் என்பது கேள்விக்குறியாக எழுந்துள்ளது. அவ்வகையில், தற்போதைய நிலவரம் பார்ப்போம்..
ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தை, கமல் தயாரிக்க, சுந்தர்.சி இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது. பின்னர், சில தினங்களில் இயக்குநர் பொறுப்பிலிருந்து திடீரென விலகினார் சுந்தர்.சி. இதனால், இப்பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து தொடர்கிறது. இப்படத்துக்காக தொடர்ந்து கதைகள் கேட்கும் சூழலில் ராஜ்கமல் நிறுவனமும், ரஜினியும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது ரஜினியின்173-வது படத்துக்காக ‘மகாராஜா’ படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலன் மற்றும் ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் ஆகியோர் கதைகள் கூறியிருக்கிறார்கள். இந்த இருவரில் ஒருவர் இயக்குநராக இருப்பார் என்பது உறுதியாகி இருக்கிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினி பிறந்த நாளன்று அறிவிக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
தற்போது ’ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. அதனை முடித்துவிட்டு கமல் தயாரிக்கும் தனது 173-வது படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
