ஹரிஸ் கல்யாண் நடித்த ‘தாஷமக்கான்’ படத்தின் அப்டேட்ஸ்..

Web Ads

ஹரிஸ் கல்யாண் நடிப்பில் புதிய கதைக்களத்துடன் வெளியான ‘டீசல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்றது. முன்னதாக இப்படத்துக்கு இடையே, ‘லிஃப்ட்’ பட இயக்குநரான வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் நடித்து வந்தார் ஹரிஷ் கல்யாண்.

தற்போது, இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முழுக்க ஆக்‌ஷன் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.

தற்போது இப்படத்துக்கு ‘தாஷமக்கான்’ எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க இடா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். விரைவில் இப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் டீஸர் உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு துவங்கியிருக்கிறது. ஹரிஷ் கல்யாண் படங்களில் அதிக பொருட்செலவில் தயாராகியுள்ளது இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

actor harish kalyan dashamakan movie first look released
actor harish kalyan dashamakan movie first look released