ரஜினிகாந்த் வெளியிட்டார் ‘வித் லவ்’ படத்தின் டைட்டில் டீசர்..

Web Ads

சசிகுமார்-சிம்ரன் இருவரும் கணவன்-மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார்.

இப்பட இசைவெளியீட்டு விழாவில் தனது காதலை வெளிப்படுத்திய அபிஷனுக்கு, அகிலாவுடன் திருமணமும் நடைபெற்றது. இதற்கிடையே ஹீரோவாக நடிக்க ஒரு படத்தில் கமிட்டானார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தற்போது நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குநராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், ‘வித் லவ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தின் டைட்டில் டீசரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளதாக படக்குழு டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோமாளி, என்ற படத்தை இயக்கி வரவேற்பு பெற்ற பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக லவ்டுடே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி டிராகன், டியூட் ஆகிய படங்களுடன் ஹாட்ரிக் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Abishan Jeevinth  and Anaswara Rajan film titled With Love images 1200
Abishan Jeevinth and Anaswara Rajan film titled With Love images 1200