தனுஷ் 55 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான தகவல்.!!

தனுஷ் 55 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் சமீபத்தில் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் அடுத்ததாக தனுஷ் 54 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முறை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

