பைசன் படத்தை பாராட்டிய மணிரத்தினம்.. நன்றி தெரிவித்து மாரி செல்வராஜ் பதிவு.!!

பைசன் படத்தை பாராட்டி மணிரத்னம் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படம் 12 நாளில் 58 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் மணிரத்தினம் பைசன் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார் அதாவது பைசன் படத்தை பார்த்தேன் உங்கள் படத்தை பார்த்து பெருமைப்படுகிறேன் எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது மாரி செல்வராஜ் தான் உண்மையான பைசன் என பதிவிட்டு இருந்தார்.
அதற்கு பதில் அளித்த மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் இல் இருந்து என் படைப்புகள் அத்தனையும் பார்த்து கவனித்து பாராட்டு என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வார்த்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார் என பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Hi Mari,
Just saw the film. Liked it a lot. You are the Bison. Proud of your work. Keep it going. This voice is important.🦬
– Director Mani Ratnam
பரியேறும்பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும்… pic.twitter.com/JlHXUaLD3Q— Mari Selvaraj (@mari_selvaraj) October 28, 2025