ரஜினியை பார்த்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை பயணம் சென்றிருக்கின்றார். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்க்கும்போது இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாரா இவர்? என கேட்கத் தூண்டும் அளவிற்கு உள்ளது. அந்தளவிற்கு ரஜினி தன் இமேஜை மறந்து மக்களோடு மக்களாக தரிசனம் செய்து வருகின்றார்.

அதனைத்தொடர்ந்து ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பில் இணையவுள்ளார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜூன் மாதம் படம் வெளியாகும் என ரஜினி கூறிவிட்டார்.

‘ஜெயிலர்-2’ படத்தை தொடர்ந்து கமலுடன் இணைந்து ரஜினி ஒரு படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ரஜினி மற்றும் கமல் இதனை உறுதிப்படுத்தி விட்டனர். ஆனால், அதற்கு முன்னதாக ரஜினி மிக விரைவாக ஒரு படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார். அப்படத்தை சுந்தர்.சி இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், ‘இளைஞர்கள் எல்லாம் ரஜினியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அவரின் எளிமை, மனவலிமை மற்றும் ஆன்மீகத்தை பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன். இளைஞர்களும் இதை பின்பற்றினால் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்திற்கு செல்லலாம்’ என கூறியிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவரின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக, ரஜினி நடிப்பில் எஸ்.ஏ. சந்திரசேகர் ‘நான் சிகப்பு மனிதன்’ என்ற படத்தை இயக்கினார். அப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது நினைவுகூரத்தக்கது.

sa chandrasekar about rajinikanth strenght