‘காந்தாரா சாப்டர்-1’ படத்திற்கு பிரபல இயக்குநர் பாராட்டு..

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் ரிலீசானது ‘காந்தாரா சாப்டர் 1’. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகியுள்ள இப்படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
பான் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது ‘காந்தாரா 1’. இதனிடையில் திரையுலகை சார்ந்த பிரபலங்களும் படத்துக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தினை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், ‘இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒன்று காந்தாரா சாப்டர் 1. மாஸ்டர் பீஸ். இடி மின்னல், மழை, காடு, தெய்வீகம் உள்ளிட்ட சினிமா அசைக்க முடியாதது.
தனியாளாக ரிஷப் ஷெட்டி படத்தை உருவாக்கி தூக்கி நிறுத்தி இருக்கிறார். பின்னணி இசைக்கு சிறப்பு பாராட்டுக்கள். இவ்வாறு தனது பதிவில் குறிபிட்டுள்ளார் சந்தீப் வங்கா. அவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. அவருடைய இந்த பாராட்டுக்கு நன்றி சகோதரா என பதில் அளித்துள்ளார் ரிஷப் ஷெட்டி.
கடந்த 2022 ஆம் ஆண்டு பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானது காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படத்தில் சப்தமி கவுடா, கிஷோர் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர். நிலம் சார்ந்த அரசியலுடன், நாட்டார் தெய்வ வழிபாட்டை கதைக்களமாக கொண்டு வெளியான ‘காந்தாரா’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலை வாரி குவித்தது. ரிஷப் ஷெட்டியின் நடிப்பும் பல தரப்பில் இருந்து பாராட்டுக்களை பெற்றது.
இந்த பிரம்மாண்ட வரவேற்பினை தொடர்ந்து காந்தாராவுக்கு முந்தைய கதைக்களமாக கொண்டு அடுத்த படத்தினை உருவாக்கும் பணிகளில் இறங்கினார் ரிஷப் ஷெட்டி. ருக்மணி வசந்த், ஜெயராம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தினை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரித்தது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இப்படத்தின் பணிகள் நடந்து வந்த நிலையில், திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்று வருகின்றன.
