சிம்பு நடிக்கவிருக்கும் ‘வடசென்னை’ கதைக்களம் குறித்து வெற்றிமாறன்..

மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்து வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘வடசென்னை’ படம் தொடங்கப்பட்டபோது, முதலில் சிம்புதான் நடிப்பதாக இருந்தது. பின்பு சில காரணங்களால் நடைபெறவில்லை.
அக்கதையில் தனுஷ் நடிக்க வந்தவுடன், அதனை அவருக்கு ஏற்ற வகையில் மாற்றினேன். இப்போது, சிம்பு நடிக்கவுள்ள படத்தின் கதை என்னவென்றால், முதலில் சிம்பு நடிக்கவிருந்த வடசென்னை கதை தான்.
ஒரே காலகட்டத்தில் வேறொரு இடத்தில் நடிப்பது மாதிரி இருக்கும். ’வடசென்னை’ படத்தில் நடித்த கதாபாத்திரங்களும் இப்படத்தில் இருப்பார்கள். ’அன்பு’வாக நடித்த தனுஷ் மட்டும் இப்படத்தில் இருக்க மாட்டார்’ என்றார்.
இதன் மூலம் ‘வடசென்னை’ கதை காலகட்டத்தில் வேறொரு பக்கத்தில் நடக்கும் கதையாக இப்படம் இருக்கும் என்பது உறுதியாகிறது. இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாய் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சிம்பு தனது STR-50 படத்தை தேசிங்கு பெரியசாமி மற்றும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.
