ரஜினி குறித்து, சிவகார்த்திகேயன் பேச்சு..

Web Ads

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம், செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோயம்புத்தூரில் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அங்கு ‘மதராஸி’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது ரஜினி குறித்து சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர்,

‘எனக்கான ஊக்கம், ஆதர்சம் எல்லாமே ரஜினி சார் தான். அவரைப் பார்த்துதான் எனக்கு சினிமாவை பிடித்தது. அவரைப் பார்த்து தான் சினிமாவுக்கு வரவேண்டும் என்று தோன்றியது. அவருடைய குரலில் பேசிதான் கைதட்டல்கள், பணம், வாய்ப்பு எல்லாமே வாங்கினேன்’ என்றார்.

கோயம்புத்தூர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கொச்சிக்கு சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அங்கு ‘மதராஸி’ விளம்பரப்படுத்தும் நிகழ்வினை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் விளம்பரப்படுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து இறுதியாக படக்குழுவினர் அனைவரும் பங்குபெறும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றும் சென்னையில் நடைபெற உள்ளது.

i saw rajinikanth and liked the cinema sivakarthikeyan shares
i saw rajinikanth and liked the cinema sivakarthikeyan shares