ரஜினியின் ‘கூலி’ திரைப்படம், தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபமா? நஷ்டமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், லோகேஷ் கனராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், இந்த விமர்சனங்களால், இப்படத்தின் வசூலை எந்தளவிலும் பாதிக்கவில்லை.
படம் வெளியான முதல் நாளிலேயே 151 கோடி வசூலித்திருந்தது. அதனைத்தொடர்ந்து நான்கு நாட்களில் 400 கோடி வசூலை குவித்தது. தமிழ் சினிமாவின் அதிவேகமாக 400 கோடி வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை கூலி நிகழ்த்தியது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகும் நிலையில், சுமார் 430 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், 500 கோடி வசூலை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தால் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபமா? நஷ்டமா? என்றால், இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் தயாரானது. தற்போது 430 கோடி வரை வசூலித்திருக்கிறது. அவ்வகையில், தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாகவே அமைந்துள்ளது.

மேலும், இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் போன்றவற்றை கணக்கிட்டால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பெரும் லாபத்தை பெற்றுத் தந்துள்ளதாகவே கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால், இது பற்றிய அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
கூலி படத்திற்கு கிடைத்த கடுமையான விமர்சனங்கள், படத்தின் வசூலை எந்தளவிலும் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்திற்கு A சான்று கிடைத்ததனால் குழந்தைகள் இப்படத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரஜினிக்கு கோடானகோடி குழந்தைகள் ரசிகர்களாக உள்ளனர். இதையும் மீறி, இப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை ஈட்டி இருக்கிறது.
தற்போது படக்குழு இப்படத்திற்கு U /A சான்று வாங்க முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. அப்படி U /A சான்று வாங்கிவிட்டால், குழந்தைகள் இப்படத்தை திரையில் பார்க்கலாம். வசூலும் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றது.
