தவறாகப் புரிந்து செய்தியாக பரப்புவது நியாயமற்றது: லட்சுமி ராமகிருஷ்ணன் ஃபீல்..

Web Ads

விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி 6’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், ‘முன்பு கமலை காதலித்து வந்ததாகவும், அதை அவரிடம் சொல்ல முயன்றபோது நீங்கள் தங்கை மாதிரி என சொல்லி அனுப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதை வைத்து பலரும் செய்திகள் வெளியிட்டார்கள். லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்தப் பேச்சு வைரலாக பரவியது.

இந்தப் பேச்சு தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில், ‘நான் 16 வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18 வயதில் திருமணம் செய்தேன். 42-வது வயதுவரை எனக்கு சினிமா உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை.

Web Ad 2

மற்ற பலர் போலவே, நான் நட்சத்திரங்களை ஒரு ரசிகையாகவும், குழந்தைகள் போன்று ஆச்சரியத்துடனும் பார்த்தவள்தான். 45-வது வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்தபோது, உண்மையிலேயே ஸ்டார் ஸ்ட்ரக் ஆகிவிட்டேன்.

அவர் என்னைப் பார்த்து, ‘என் சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்’ என சொன்னதும், என் நண்பர்கள் நகைச்சுவையாக கலாய்த்தார்கள். இதைத்தான் நான் குக்கு வித் கோமாளியில் நன்றாக ரசித்துப் பகிர்ந்தேன். இதைப் தவறாக புரிந்து, செய்தியாக மாற்றி பரப்புவது நியாயமற்றதுமே அல்லாமல், மிகுந்த நாகரிகமற்றதும்கூட’ என தெரிவித்துள்ளார்.

lakshmi ramakrishnan clarifies about kamal haasan
lakshmi ramakrishnan clarifies about kamal haasan