‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி ஸ்ருதிஹாசன் தகவல்-வைரல்..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது.

இப்படத்தில் ரஜினிக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். அமீர்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் குறித்து ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ள தகவல் தற்போது வைரலாகி தெறிக்கிறது.

‘என் தந்தையும் (கமல்ஹாசன்) ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவின் இரண்டு தூண்கள், தமிழ் சினிமாவின் முகங்களாக இருப்பவர்கள். ரஜினிகாந்தை, பொதுமக்களின் பார்வையில் இருந்தும் அவரை ஒரு சூப்பர் ஸ்டாராகவும் என் அப்பாவின் பார்வையில் இருந்தும் அறிந்திருக்கிறேன்.

ஆனால், கூலி படப்பிடிப்பில் நேரடியாக அவரை அறிவது சுவாரஸ்யமாக இருந்தது. அவர் தனித்துவமான பல்வேறு குணாதிசயங்களின் கலவையைக் கொண்டவர். மிகவும் கூர்மையானவர். அவர் படப்பிடிப்பு தளத்துக்கு எப்போதும் நல்ல எனர்ஜியுடன் வருகிறார். அவருடன் பணியாற்றுவதை அனைவரும் விரும்புகிறார்கள்’ என ஸ்ருதி கூறியுள்ளார்.

rajinikanth is unique says actress shruti haasan
rajinikanth is unique says actress shruti haasan