விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை யாஷிகா ஆனந்த் கருத்து..

Web Ads

‘எதுவுமே இங்கு எளிது கிடையாது’ என கூறியுள்ளார் யாஷிகா. இது பற்றிய விவரம் காண்போம்..

‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், அடுத்த ஆண்டு ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குகிறார்.

இதற்கிடையே, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விஜய்க்கு கடைசிப் படம் என சொல்லப்படுகிறது. இப்படம் ஜனவரி 9-ந்தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகையை ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தாலும், திரைத்துறையிலிருந்து அவருக்கு சில ஆதரவுக் குரல்களும் எழத்தான் செய்கின்றன.

அவ்வகையில், இப்போது விஜய் தான் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் என்பது அனைவருக்குமே தெரியும். அவரது ஒவ்வொரு படமும் வசூல் சாதனை படைக்கிறது. அவருக்கு தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வருகிறார், பாராட்டத்தான் வேண்டும். விஜய் தைரியமான முடிவை எடுத்திருக்கிறார். வேறு யாரும் அப்படி எடுக்கமாட்டார்கள்’ என சமுத்திரகனி உள்ளிட்டோர் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதேசமயம் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும் திரைத்துறையினரே கோரிக்கைகள் வைக்க ஆரம்பித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பதிலளிக்கையில்,

‘அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் சாருக்கு என்னுடைய வாழ்த்துகள். எதுவுமே இங்கு எளிது கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு விஷயத்துக்காக மற்றொரு விஷயத்தை விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும். அரசியலுக்காக அவர் சினிமாவை விட்டு வருவது நல்ல விஷயம்தான்’ என்றார்.

actress yashika anand open talks about vijays political entry
actress yashika anand open talks about vijays political entry