‘பரோட்டா மாஸ்டர்’ விஜய் சேதுபதிக்கும் ‘கோடீஸ்வரி’ நித்யா மேனனுக்கும் சண்டை..

ஊடல்தானே கூடலுக்கு அழகு. அவ்வகையில் இல்லறத்தில் நிகழும் செல்லச் சண்டைகள் பேரினிது. இப்ப, விஷயத்திற்கு வருவோம்..
பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றிப் பார்ப்போம்..
தலைவன் தலைவி படத்தில், யோகிபாபு, செம்பியன் வினோத் என பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதில், “அப்பா, அம்மாவை எல்லாம் விட்டு விட்டு, நான்தான் வேண்டும் என்று வந்து இருக்கா, அவளை மகாராணி போல தாங்குவேன்” எனகிறார் விஜய்சேதுபதி.
அப்போது, “கொத்து பரோட்டாவை கொத்திக்கொண்டு இருக்கும் நித்யா மேனன், “இதுதான் மகாராணி போல பாத்துக்கும் லட்சணமா?” என கேட்கிறார்.
“பிடிக்கவில்லை என்றால், உங்க அப்பாவின் அரண்மனைக்கு போடி” என்று விஜய் சேதுபதி சொல்ல, இருவருக்குள்ளும் செல்லச்சண்டை வருகிறது.
டீசரின் முடிவில், “அவர்கள் இருவரும் நார்மல் பீப்பில் இல்ல, ப்ளீஸ் புரிஞ்சிங்கோங்க” என நயன்தாராவை வம்புக்கு இழுத்துப் பேசியிருக்கிறார் யோகிபாபு. இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக பயிற்சி எடுத்து, பின்னர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
