பாலபிஷேகம் முதல் அன்னதானம் வரை..அஜித்தின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடும் ரசிகர்கள்..!

Web Ads

அஜித்தின் பிறந்தநாள் கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Fans celebrate Ajith's birthday with a bang

Fans celebrate Ajith’s birthday with a bang

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. உலக அளவில் 300 கோடியை நெருங்க உள்ளது இந்த திரைப்படம்.

சமீபத்தில் இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதனை ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் தற்போது அவரது 54ஆவது பிறந்த நாளை இன்று ரசிகர்கள் உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் 108 பால்குடம் எடுத்து பாலாபிஷேகமும், பல இடங்களில் அன்னதானமும் செய்து வருகின்றனர். மேலும் அன்பு இல்லங்களில் காலை உணவுகளும் ரசிகர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது பத்மபூஷன் அஜித்குமார் அவர்களுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.