கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை பார்வதி நாயரின் திருமணம்; திரைப் பிரபலங்கள் வாழ்த்து

Web Ads

பார்வதி நாயருக்கும், தொழில் அதிபர் ஆஷ்ரித்துக்கும் கோலாகலமாக இன்று திருமணம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்..

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக பறந்து வரும் மலையாள நடிகை பார்வதி நாயருக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் பலரும் மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ படத்தில் சின்ன வேடத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.
பின்னர் அஜித்&அருண் விஜய் நடித்த என்னை அறிந்தால் படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் நடித்தார். மேலும், லோகேஷ் கனகராஜின் எழுத்தில் உருவான ‘வெள்ள ராஜா’ என்ற இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். விஜய்யின் ‘கோட்’ படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இன்று பார்வதி நாயருக்கு சென்னை, திருவான்மியூரில் திருமணம் நடந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மணமக்களுக்கு இணையத்தில், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, ‘ஆலம்பனா’ என்ற படத்தில் நடித்து வரும் இவர், சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கிறார். இவருக்கு டுவிட்டரில் 3 லட்சத்திற்கும் அதிகமான பாலோவேர்கள் இன்ஸ்டாவில் 7 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.